Friday, September 21, 2007
நான்.....
கரையான்...
எறும்புகளை...
காத்து கிடக்கின்றேன்,...
நன்றி கடனாய்,.....
என் ஆத்மாவை பிரிந்த நான்.....
கடந்து வந்த
நாட்களை நினைக்கின்றேன்,...
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......
என் ஆத்மாவின்
உற்பத்திக்கு
பாதிப் பாதியாய்
வித்திட்ட
என் தாய் தந்தைக்கோ,....
இல்லை......
பத்து மாதம் எனை சுமந்து
பக்குவமாய் உருக்கொடுத்த
என் தாயின் கருவறைக்கோ......
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......
என்னில்
அறிவொளியை ஏற்றி..
என் வாழ்வை
பகலாக்கிய குருவுக்கோ.....
இல்லை........
ஏகாந்த உலகை
எனக்கு காட்டாமல்,...
ஏற்றத்திலும் இறக்கத்திலும்
ஆறுதலாய்
எனை அரவணைத்த
தோழர்களுக்கோ....
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......
ஏக விரதயாய்
என்னில் கலந்து
என் சுமைகளையே
சுவையாக மாற்றி
என்னில் பாதியான
என்னவள்க்கோ,....
இல்லை.........
தள்ளாத வயதினிலே
விழுதுகலாய் எனை தாங்கிய
என் சந்ததிக்கோ.....
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......
இணை பிரியாமல்
என்னில் இருந்து
இயற்கைக்கு அடிமையாய்
எனை பிரிந்த...
என் ஆத்மாவிற்கோ......
நன்றி நான் யாருக்குச் சொல்ல ?......
கடந்து வந்த நாட்களிலே...
கடன் பட்டு கிடக்கின்றேன்,...
பூமித்தாயின் மடியில்,...
பாரமாய் அவள்க்கும்.....
கண்களை மூடிவிட்டார்கள் ...
உறக்கம் வருகிறது....
உறங்குகின்றேன்,.....
தென்றலாய் வரும்
அவள் சுவாசத்தின் தாலாட்டில்,......
நன்றி கடனாய் !...
கரையான், எறும்புகளை....
காத்து,...காத்து,...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment